'ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம்' - ஓ.பன்னீர்செல்வம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2024-07-07 20:53 IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான உதாரணம் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு ஓர் உதாரணம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்