மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் மயக்கம்
பறக்கும் ரெயில் நிலையங்களில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு சாகசங்களை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.;
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறக்கும் ரெயில் நிலையங்களில் மக்கள் முண்டியத்துக்கொண்டு விமான சாகசங்களை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.