தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சேலம் தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- கரூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- நெல்லை கிழக்கு காவல் துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் எஸ்.பி.யாக நியமனம்
- சேலம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த அருண் கபிலன், நாகை எஸ்.பி.யாக நியமனம்
- விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பெரோஸ் கான், கரூர் எஸ்.பி.யாக நியமனம்
- திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
- திருவல்லிக்கேனி துணை ஆணையராக செல்வ நாகரத்தினம் நியமனம்
- நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா நியமனம்
- திருப்பத்தூர் எஸ்.பியாக ஸ்ரேயா குப்தா நியமனம்
- சேலம் எஸ்.பியாக கவுதம் கோயல் நியமனம்
- விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்
- மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் நியமனம்
- தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம்
- சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக இருந்த ஶ்ரீனிவாசன் தென்காசி எஸ்.பி.யாக நியமனம்
மேலும் அதன் விவரம் வருமாறு:-