122-வது பிறந்தநாள்: காமராஜர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செய்து சிறப்பிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.