முறைகேடுகள் நடக்கும் 100 நாள் வேலை திட்டம் - நீதிபதிகள் வேதனை

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-08-21 11:50 GMT

கோப்புப்படம்

மதுரை,

தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 2020-21ம் ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலர், பழையகோட்டை பஞ்சாயத்து தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு அதிகரித்து வருவதாக ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்கு 100 நாள் வேலை திட்ட முறைகேடுகள் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தனர்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை செப்.10 தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்