வன்னிய பெருமாள் கோவில் தேரோட்டம்
புதுவை முதலியார்பேட்டையில் உள்ள பிரசித்திபெற்ற வன்னிய பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடந்தது.;
புதுச்சேரி
புதுவை முதலியார்பேட்டையில் உள்ள பிரசித்திபெற்ற வன்னிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுடன் தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.
அப்போது மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சம்பத் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவில் நாளை (புதன்கிழமை) காலை சிறப்பு திருமஞ்சனம், நாளை (வியாழக்கிழமை) மாலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.