சிலைக்கு, அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

Update:2023-01-18 23:24 IST

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்