புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளி வாழ்த்து
'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நெருங்கி வரும் சூழலில் புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பிரதமரின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம். தீபாவளி பண்டிகை அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.