குடிபோதையில் ரகளை செய்தவர் கைது

மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-01-08 20:13 IST

மூலக்குளம்

மூலக்குளம் குண்டு சாலை தனியார் மதுபானம் கடை அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ரெட்டியார்பாளையம் போலீசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருவண்டார்கோவில் சின்னப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்