டிரைவருக்கு கத்திக்குத்து
பாகூர் அருகே சமாதனம் செய்ய வந்தவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..;
பாகூர்
கிருமாம்பாக்கம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 21). டிரைவர். இவர் நேற்று கிருமாம்பாக்கம் பூங்கா அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த ரூபன், திவான் (24) ஆகியோர் சண்டையிட்டுள்ளனர். இதைக்கண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ரூபன், பேனா கத்தியால் ஜார்ஜ் பெர்னாண்டசை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.