பெண்ணுக்கு கொலை மிரட்டல்
கோட்டுச்சேரியில் முன்விரோத தகராறில் வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி வரிச்சிக்குடி சோனியாகாந்தி நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 40). கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை அந்தோணிராஜின் மனைவி மீனாட்சி (36), வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆனந்தனின் மனைவி உஷாராணி (44), அவரது மகள் ஆஷிகா, மகன் விக்னேஸ்வரன், உஷாராணியின் தங்கை மகன் நிஷாகன் ஆகியோர் வீடு புகுந்து மீனாட்சியிடம் தகராறு செய்து, தரக்குறைவாக திட்டினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் உஷாராணி உள்பட 4 பேர் மீது கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிஷாகனை கைது செய்தனர்.