மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை, மகன் காயம்

காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மகன் காயம் அடைந்தனர்.;

Update:2022-08-18 21:20 IST

கோட்டுச்சேரி

திருவாரூர் மாவட்டம் பேரளத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). கொத்தனார். இவரது மகன் சிலம்பரசன் (27). இவர்கள் 2 பேரும் சுரக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

காரைக்கால் அருகே கருக்கன்குடி பள்ளிவாசல் அருகே எதிரே வந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து ரவி அளித்த புகாரின்பேரில் காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்