கஞ்சா விற்ற செய்த 4 வாலிபர்கள் கைது

புதுவை புதிய பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-23 22:17 IST

புதுச்சேரி

புதுவை புதிய பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

புதுவையில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார்  இன்று காலை புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் பகுதியை சேர்ந்த ஜீவா என்ற ஜீவானந்தம் (வயது 23), மேகி என்ற மகேஷ் (21), வன்னியர்பாளையத்தை சேர்ந்த ரேவந்த் (25), மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஆதித்தியன் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்