உத்தவ் தாக்கரே கார் கான்வாய் மீது சாணம், தேங்காய் வீசி தாக்குதல்

உத்தவ் தாக்கரே கான்வாய் மீது, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2024-08-11 03:56 GMT

மும்பை,

மராட்டியத்தில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத்ஷிண்டே- உத்தவ் தாக்கரே இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிவசேனா கட்சியை ஏக்நாத்ஷிண்டே கைப்பற்றினார்.  இதையடுத்து, உ சிவசேனா உத்தவ் என்ற கட்சியை த்தவ் தாக்கரே நடத்தி வருகிறார்.  இதற்கிடையே, உத்தவ் தாக்கரேவின் உறவினரும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரேவிற்கும் இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே பேசிய கருத்துக்கு ராஜ்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கடந்த  வெள்ளிக்கிழமை அன்று ராஜ் தாக்கரேவின் வாகனம் பீட் நகரில் சென்று கொண்டிருந்தபோது, உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சிலர் , வெற்றிலை பாக்கை வீசியதாக கூறப்படுகிறது.இதற்கு பதிலடியாக, உத்தவ் தாக்கரே கான்வாய் மீது, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் மாட்டுச் சாணம் வீசியும், தேங்காயை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

உத்தவ் தாக்கரே, தானேவில் உள்ள கட்காரி ரங்காயத்தன் என்ற இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த எம்.என்.எஸ் தொண்டர்கள், பைகளில் வைத்திருந்த மாட்டுச் சாணத்தை உத்தவ் தாக்கரே கான்வாயின் மீது வீசினர். மேலும், சிலர் தேங்காய்களையும், வளையல்களையும் கான்வாய் மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்