பீகாரில் சாமி சிலைகள் உடைப்பு.. கொதித்தெழுந்த பொதுமக்கள்

சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் கொதித்தெழுந்த பொதுமக்கள், சான்ஹாலா காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-10-20 10:05 GMT

பாகல்பூர்:

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் சான்ஹாலா பஜாரில் உள்ள இந்து கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.

இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் கொதித்தெழுந்த பொதுமக்கள், சான்ஹாலா காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர். சாலை மறியலும் செய்தனர். டயர்களை எரித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பதற்றம் உருவாகாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தினர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்