மந்திரி பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார் கைலாஷ் கெலாட்

முன்னாள் மந்திரி கைலாஷ் கெலாட் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2024-11-27 11:56 GMT

புதுடெல்லி,

டெல்லியில், முதல்-மந்திரி அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அதில், உள்துறை, போக்குவரத்து, நிர்வாக சீர்திருத்தம், தகவல் தொழில்நுட்பம், பெண்கள், குழந்தைகள் மேம்பாடு போன்ற முக்கிய இலாகாக்களின் மந்திரியாக இருந்தவர் கைலாஷ் கெலாட். இவர் கடந்த நவம்பர் 17ம் தேதி தனது மந்திரி பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர், அடுத்த நாளே அவர் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மந்திரி பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்து கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ளார். கைலாஷ் கெலாட் தற்போது பாஜகவின் டெல்லி சட்டசபை தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 70 உறுப்பினா்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்