ராஜஸ்தான்: எரிவாயு டேங்கர் லாரி விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2024-12-25 08:55 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி கோர விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த எரிவாயு டேங்கர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் எரிவாயு டேங்கர் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உள்பட இருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்