கர்நாடகாவில் டெங்கு பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் நேற்று ஒருவர் இறந்துள்ளார்.

Update: 2024-07-02 00:29 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

கர்நாடகத்தில் 93 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதில் பெங்களூருவில் மட்டும் 310 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதும், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 467 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே 80 வயது மூதாட்டி உள்பட 2 பேர் டெங்கு பாதிப்பால் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில் கக்கதாசபுராவை சேர்ந்த 27 வயது வாலிபர் டெங்கு காய்ச்சல் பாதித்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஜூன் மாதத்தில் மட்டும் 1,742 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் ஏற்கனவே 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் நேற்று ஒருவர் இறந்துள்ளார். இதன் மூலம் டெங்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்