கதை சொல்லும் வனவிலங்குகள்... வான்தாரா காப்பகத்தின் புதுமையான வீடியோ தொடர்

ராஜஸ்தானின் தெருக்களில் பிச்சை எடுக்கும் வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு வான்தாரா காப்பகத்தில் சேர்க்கப்பட்ட கவுரி என்ற யானையின் கதையுடன் வீடியோ தொடர் தொடங்குகிறது.

Update: 2024-08-05 07:15 GMT

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு காப்பகமான 'வான்தாரா', வன விலங்குகளை கதைகள் மூலம் கொண்டாடும் வகையில், 'வான்தாரா கே சூப்பர்ஸ்டார்கள்' என்ற தலைப்பில் புதுமையான கல்வி வீடியோ தொடரை வெளியிடுகிறது. பொழுதுபோக்கு மற்றும் வனவிலங்கு தொடர்பான விழிப்புணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வன விலங்குகள் பேசுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு, புகழ்பெற்ற இந்திய பிரபலங்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

ராஜஸ்தானின் தெருக்களில் பிச்சை எடுக்கும் வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு வான்தாரா காப்பகத்தில் சேர்க்கப்பட்ட முதல் யானையான கவுரியின் கதையுடன் இந்த தொடர் தொடங்குகிறது.

கவுரிக்கு குரல் கொடுக்கும் நீனா குப்தா, வான்தாராவின் இந்த புதிய முயற்சி பற்றி கூறுகையில், "கவுரிக்கு குரல் கொடுக்கும் வான்தாராவின் முயற்சியில் பணிபுரிவது உணர்வுப்பூர்வமான அனுபவம். இந்த கல்வி வீடியோக்கள் மூலம், வான்தாரா வெறும் கதைகளை மட்டும் சொல்லாமல், வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய ஆழமான புரிதலை கொடுக்கிறது. நமது இயற்கை உலகத்தை பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த கருத்துடன் பொழுதுபோக்கையும் இணைக்கும் இந்த புதுமையான திட்டத்தில் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்