புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்

அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-04-07 09:22 IST
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த ஜே.பி.நட்டா, கடந்த 2019-ம் ஆண்டு, பாஜகவின் தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் உள்பட கட்சி ரீதியிலான நிர்வாக காரணங்களால், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. முன்னதாக பாஜகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், பாஜக அமைப்பு ரீதியிலான தேர்தலும் நடைபெற்று வருகிறது.

கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்திடும் நோக்கத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. பூத் கமிட்டி தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள் தேர்தலுக்கு பிறகு தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும். தற்போது, நாடு முழுவதும் பூத் கமிட்டி, மண்டல், மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்று புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பாஜக புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கு முன்னதாக, 19 மாநிலங்களில் புதிய மாநில தலைவர்களை நியமனம் செய்வதற்கான பணிகளை தேசிய தலைமை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, அமைப்பு ரீதியாக பெரிய மாநிலங்களில் மாநில தலைவரை விரைவில் நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதில், உத்தரபிரதேசத்தின் பா.ஜனதா மாநில தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் மற்றும் மத்திய பிரதேச மாநில தலைவர் வி.டி.சர்மா ஆகியோருக்கு பதிலாக புதிய முகங்களை தேர்வு செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கடந்த 2023-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா அந்த பதவியில் தொடர்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், குஜராத், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் புதிய தலைவர்களை தேர்வு செய்ய தமிழக தலைவர் யார்? முடிவு செய்துள்ளது. தமிழக தமிழக தலைவர் யார்? தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் சமீப நாட்களாக பரவி வருகிறது.

சமீபத்தில், பேட்டி அளித்த அண்ணாமலை, 'தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே தமிழக பா.ஜனதா புதிய தலைவர் யார் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில், மாநில தலைவர்கள் நியமனத்தில் இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்புகள் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்