பீகார்: சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன
பீகாரில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டதும் ஆரா, கயா மற்றும் தனாப்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
பாட்னா,
பீகாரில் கிழக்கு மத்திய ரெயில்வேயின் தனாப்பூர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் இன்று மாலை திடீரென தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
இந்த விபத்து பந்துவா-பைமர் யார்டு பகுதியில் நடந்தது என்றும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதும் ஆரா, கயா மற்றும் தனாப்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என கிழக்கு மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சரஸ்வதி சந்திரா கூறியுள்ளார்.
தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.