ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் - மீட்புப்பணி தீவிரம்
150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.
ராஜஸ்தான்,
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நேற்று திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யன் என்ற அந்த சிறுவன் கலிகாட் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த போது, 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இது குறித்து அறிந்த தேசிய மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலம் சிறுவனின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.