மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-12-05 20:45 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வதும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மற்றொரு புறம் மோட்டார் சைக்கிள் சாகசத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் சில இடங்களில் விபத்துகளும் நடந்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு நகரில் அதிகப்படியாக கே.ஆர்.புரம், டி.ஜே.ஹள்ளி, கெங்கேரி, ஞானபாரதி, உல்லால் மெயின் ரோடு, விசுவேஸ்வரா லே-அவுட், இந்திராநகர் 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களில் சாகசம் செய்வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களில் சாகசத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதன்படி கே.ஆர்.புரம், டி.ஜே.ஹள்ளி, ஞானபாரதி உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்