டானா புயல் எதிரொலி - 28 ரெயில் சேவைகள் ரத்து

நாளை அக்.24, 26 தேதிகளில் இயக்கப்படவிருந்த பல்வேறு ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்து உள்ளது.

Update: 2024-10-22 12:43 GMT

சென்னை,

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக். 25 அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

# தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

# தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

# கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் ரெயில்கள் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

# சந்திரகாசியில் இருந்து எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரும் ரெயில் அக்.24ல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

# கோரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

# சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

# ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் விரைவு ரெயில், ஹெளரா - திருச்சி அதிவிரைவு ரெயில் உள்ளிட்ட 28 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்