உலக கோப்பை கால்பந்து: நேரலையில் திருட்டு; போலீசார் பதிலால் அதிர்ந்த பெண் நிருபர்

உலக கோப்பை கால்பந்து போட்டி நேரலையின்போது தனது பை திருடு போனது பற்றி கூற சென்ற இடத்தில் போலீசாரின் பதிலால் பெண் நிருபர் அதிர்ந்து போயுள்ளார்.;

Update:2022-11-21 23:13 IST



தோஹா,


உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பி கொண்டிருக்கும்போது, அர்ஜெண்டினா நாட்டு பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் பரபரப்புடன் செயல்பட்டு இருந்துள்ளார்.

இதில், அவரிடம் இருந்த கைப்பை ஒன்று திருடு போயுள்ளது. அதனை முதலில் அவர் கவனிக்கவில்லை. பின்னர், இதுபற்றி உதவி கேட்டு போலீசிடம் டாமினிக் சென்றுள்ளார். ஆனால், அதற்கு கிடைத்த பதில் அவரை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இவர் சென்றபோது, பெண் காவலர், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமிராக்களை எல்லா இடத்திலும் நாங்கள் வைத்திருக்கிறோம். அதனால், முக அடையாளம் வழியே அந்நபரை (திருட்டில் ஈடுபட்ட நபர்) நாங்கள் கண்டறிய போகிறோம்.

அவரை கண்டறிந்த பின்பு, அந்த நபருக்கு என்ன நீதி வழங்க நீங்கள் விரும்புகிறீர்கள்? என கேட்டு அவரை ஆச்சரியமடைய செய்துள்ளார். இதனால் சற்று விளக்கும்படி டாமினிக், அந்த பெண் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், உங்களுக்கு என்ன நீதி வேண்டும்? அந்த நபருக்கு நாங்கள் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த நபரை 5 ஆண்டுகள் சிறையில் தள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அவரை நாடு கடத்த விரும்புகிறீர்களா? என கேட்டுள்ளார்.

இதனால், ஆச்சரியத்தில் தள்ளப்பட்ட டாமினிக், காணாமல் போன தன்னுடைய பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவினால் போதும் என்று கூறியுள்ளார்.

கத்தார் நாட்டில் பாதுகாப்பு விசயங்கள் பற்றி பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. போட்டி தொடருக்கான பாதுகாப்பு கமிட்டி, அனுபவம் இல்லாத நபர்கள் உள்பட ஆயிரம் ஆண்கள் வரை பாதுகாவலர்களாக பணிக்கு அமர்த்தி, கூட்ட நெருக்கடியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்