உலக கோப்பை கால்பந்து: அற்புத சாதனை நிகழ்த்திய அணி...!
அனைத்து உலக கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ஒரே அணி விவரம்.;
தோகா,
இதுவரை நடந்துள்ள அனைத்து உலக கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ள ஒரே அணி பிரேசில் தான். அதிக முறை உலக கோப்பையை ருசித்த அணி (5 முறை) என்ற பெருமையும் உண்டு. பிரேசில் 109 ஆட்டங்களில் விளையாடி 73-ல் வெற்றியும், 18-ல் டிராவும், 18-ல் தோல்வியும் கண்டுள்ளது.
உலக கோப்பையில் இதுவரை 30 ஆட்டங்களில் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 1994, 2006-ம் ஆண்டு இறுதிப்போட்டிகளும் அடங்கும். அர்ஜென்டினா அதிகபட்சமாக 5 முறை பெனால்டி ஷூட்-அவுட்டில் விளையாடி இருக்கிறது.
அதிக முறை உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று கோப்பையை வெல்லாத அணி மெக்சிகோ. தற்போது 17-வது முறையாக அடியெடுத்து வைக்கும் மெக்சிகோ கால்இறுதி சுற்றுக்கு மேல் சென்றதில்லை.