உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸியின் அசத்தல் கோல்..! சவுதி அரேபியாவுக்கு எதிராக அர்ஜென்டினா அணி 1-0 என முன்னிலை
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகிக்கிறது .;
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.
ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர் .
.ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகிக்கிறது .