உலககோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி - தொடரிலிருந்து வெளியேறியது துனிசியா

இரு போட்டிகளில் தோற்றதால் துனிசியா தொடரில் இருந்து வெளியேறியது.;

Update:2022-11-26 18:10 IST

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் துனிசியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு 23வது நிமிடத்தில் மிட்செல் டுகே ஒரு கோல் அடித்தார் .

இதனால் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இரு போட்டிகளில் தோற்றதால் துனிசியா தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

மேலும் செய்திகள்