உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.;

Update:2022-12-01 16:03 IST

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது..அதன்படி குரூப் 'எப்' பிரிவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம் - குரோஷியா அணிகள் மோதுகின்றன.அதே நேரத்தில் நடக்க உள்ள மற்றொரு போட்டியில் கனடா - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

குரூப் 'இ ' பிரிவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜப்பான் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் நடக்க உள்ள மற்றொரு போட்டியில் ஜெர்மனி - கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.

குரூப் 'எப்' , குரூப் 'இ ' எந்த அணியும் இன்னும் அடுத்து சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லலை.

Tags:    

மேலும் செய்திகள்