போட்டி தொடங்கி 68வது வினாடியில் கோல் அடித்த கனடா வீரர்.....அதிவேக கோல் அடித்து சாதனை - வீடியோ

இது 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும்;

Update:2022-11-27 22:49 IST

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் குரோஷியா - கனடா அணிகள் மோதுகின்றன.இந்த நிலையில் இந்த போட்டி தொடங்கிய 68வது வினாடியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்து அசத்தியுள்ளார்.இது 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும் .

Tags:    

மேலும் செய்திகள்