உலககோப்பை கால்பந்து - சவுதி அரேபியாவை வீழ்த்தி போலந்து அபார வெற்றி

சவுதி அரேபியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.;

Update:2022-11-26 21:27 IST

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின. முதல் பாதியின் 39-வது நிமிடத்தில் போலந்தின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார்.

பின்னர் சவுதி அரேபியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத அந்த அணி பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் போலந்து அணியின் ராபர்ட் லெவான்டௌவுஸ்கி ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்