உலகக்கோப்பை கால்பந்து : 1930 முதல் 2018 வரை..சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் முழு விவரம்..!
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது.
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.
1930 முதல் 2018 வரை... கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அணிகளின் முழு விவரம்..!1930 முதல் 2018 வரை... கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அணிகளின் முழு விவரம்..!உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும்.
இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்பட 32 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும். போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈகுவடாரை (இரவு 9.30 மணி) சந்திக்கிறது. போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த நிலையில் 1930 ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் முழு விவரங்கள் :
ஆண்டு | சாம்பியன் அணி | இரண்டாம் இடம் | தொடரை நடத்திய நாடு |
1930 | உருகுவே | அர்ஜென்டினா | உருகுவே |
1934 | இத்தாலி | செக் குடியரசு | இத்தாலி |
1938 | இத்தாலி | ஹங்கேரி | பிரான்ஸ் |
1950 | உருகுவே | பிரேசில் | பிரேசில் |
1954 | ஜெர்மனி | ஹங்கேரி | சுவிட்சர்லாந்து |
1958 | பிரேசில் | ஸ்வீடன் | ஸ்வீடன் |
1962 | பிரேசில் | செக் குடியரசு | சிலி |
1966 | இங்கிலாந்து | ஜெர்மனி | இங்கிலாந்து |
1970 | பிரேசில் | இத்தாலி | மெக்சிகோ |
1974 | ஜெர்மனி | நெதர்லாந்து | மேற்கு ஜெர்மனி |
1978 | அர்ஜென்டினா | நெதர்லாந்து | அர்ஜென்டினா |
1982 | இத்தாலி | ஜெர்மனி | ஸ்பெயின் |
1986 | அர்ஜென்டினா | ஜெர்மனி | மெக்சிகோ |
1990 | ஜெர்மனி | அர்ஜென்டினா | இத்தாலி |
1994 | பிரேசில் | இத்தாலி | அமெரிக்கா |
1998 | பிரான்ஸ் | பிரேசில் | பிரான்ஸ் |
2002 | பிரேசில் | ஜெர்மனி | தென் கொரியா, ஜப்பான் |
2006 | இத்தாலி | பிரான்ஸ் | ஜெர்மனி |
2010 | ஸ்பெயின் | நெதர்லாந்து | தென்னாப்பிரிக்கா |
2014 | ஜெர்மனி | அர்ஜென்டினா | பிரேசில் |
2018 | பிரான்ஸ் | குரோஷியா | ரஷ்யா |
பிரேசில் அணி இதுவரை மொத்தம் ஐந்து முறை உலகக்கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்று பலம் வாய்ந்த அணி என்று வலம் வருகிறது