உலகக்கோப்பை கால்பந்து: சவுதி அரேபியாவை வீழ்த்தியது மெக்சிகோ..!!

சி பிரிவில் இடம் பெற்றிருந்த சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.;

Update: 2022-11-30 21:27 GMT

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.

பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் மெக்சிகோ அணி வீரர் ஹென்றி மார்டின் 47-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அவரைத்தொடர்ந்து அதே அணியில் லூயிஸ் சாவேஸ் 52-வது நிமிடத்தில் கோல் அடிக்க மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் ஆட்டநேர முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சவுதி அரேபியா வீரர் அல்டாவ்சாரி 90+5 நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் இந்த கோல் அந்த அணியின் வெற்றிக்கோ, டிரா செய்வதற்கோ இயலாமல் போனது.

இதன்மூலம் மெக்சிகோ அணி 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோதும் உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. அதேபோல் சவுதி அரேபியா அணியும் 3 புள்ளிகளுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

இதன்படி சி பிரிவில் அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்