ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
இந்திய வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர்
நாக்பூர் ,
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#TeamIndia have begun their preparations for the Border Gavaskar Trophy ahead of the 1st Test in Nagpur.#INDvAUS pic.twitter.com/21NlHzLwGA
— BCCI (@BCCI) February 3, 2023