சக ஊழியர் குத்திக்கொலை; ஆசிய நபர் கைது

சக ஊழியரை குத்திக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-26 02:00 IST

அஜ்மான்,

அஜ்மான் ரவ்தா பகுதியில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருடன் பணிபுரிந்து வந்த அதேநாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவருடன் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த ஊழியர் ஆசிய நபரின் வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து அவர் வீட்டுக்கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தார். பின்னர் ஆசிய நபரை அந்த ஊழியர் கடுமையாக தாக்கினார். தொடர்ந்து அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆசிய நபரை குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அஜ்மான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தப்பி ஓட முயன்ற கொலையாளியை சுற்றுவளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணையில், சொந்த நாட்டில் இருவரும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும் பலியான ஆசிய நபரின் உடலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலையாளியை விரைந்து சென்று கைது செய்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்