அஷ்டமி, நவமியாக இருந்தால் என்ன..? பகவானை வழிபட்டு காரியத்தை தொடங்கினால் பயமில்லை
நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம்.;
பொதுவாக எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அஷ்டமி, நவமியில் தொடங்குவதை தவிர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள் இழுபறியாக முடியும் என்பார்கள். அதேசமயம் இந்த இரண்டு நாட்களும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாட்களாக உள்ளன.
குறிப்பாக அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், அஷ்டமியில் அவதரித்த கிருஷ்ணரை வணங்கிய பிறகு காரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால், நவமியில் அவதரித்த ராமபிரான், சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு அந்த காரியத்தை பயப்படாமல் செய்யலாம்.
ராமபிரான் சீதையை பிரிந்து பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால் தான் நடந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த காரணத்தினால் தான் நவமி திதி நாளில் சுப காரியங்கள், திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்ற நல்ல செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம். குறிப்பாக, நவமி திதி அன்று போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.