விருதுநகர் ஸ்பெஷல் - பால் உருளைக்கிழங்கு கறி

இதை சாதத்துடன் சாப்பிடுவதற்கு கெட்டியான பதத்திலும், இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு தளர்வான பதத்திலும் தயாரிக்கலாம்.

Update: 2023-01-08 01:30 GMT

                                                                       விருதுநகர் ஸ்பெஷல் - பால் உருளைக்கிழங்கு கறி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

பச்சைப் பட்டாணி - ½ கப்

பச்சை மிளகாய் - 4

முந்திரி - 10

கசகசா - ½ டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பட்டை - 4

வெங்காயம் - 2

தக்காளி - 1

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1 அங்குல துண்டு

அன்னாசிப்பூ - 2

பெருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய்ப்பால் - முதல் + இரண்டாம் பால்

தேங்காய் எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மேல்தோலை நீக்குங்கள்.

பச்சைப் பட்டாணியை தனியாக வேகவையுங்கள். அதனுடன் கேரட், பட்டர் பீன்ஸ் போன்ற காய்களையும் சேர்க்கலாம்.

2 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசை போல அரைக்கவும்.

அடுத்து பூண்டு மற்றும் இஞ்சியை நசுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், அன்னாசிப்பூ போட்டு தாளிக்கவும்.

அடுத்து பூண்டு, இஞ்சியைப் போட்டு லேசாக வதக்கவும்.

பின்பு நீளவாக்கில் அரிந்த 2 பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

இப்போது அதில் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பிறகு அந்தக் கலவையில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியைச் சேர்க்கவும்.

இப்போது முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைக்கவும்.

ருசியான விருதுநகர் ஸ்பெஷல் - பால் உருளைக்கிழங்கு தயார்.

இதை சாதத்துடன் சாப்பிடுவதற்கு கொஞ்சம் கெட்டியான பதத்திலும், இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு தளர்வான பதத்திலும் தயாரிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ