உணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்

உணவைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், மூலப்பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், மெஸ், கேண்டீன், பேக்கிங் மற்றும் விநியோகம், விற்பனை செய்யும் ஏஜென்சிகள் என உணவு சார்ந்த வணிகம் செய்ய விரும்பும் எவரும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவு பாதுகாப்பு பதிவு செய்ய வேண்டும்.

Update: 2023-08-13 01:30 GMT

ணவுப்பொருட்கள் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதற்கு தற்போது பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு உணவுப்பொருட்களின் உற்பத்தி மற்றும் உணவு சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சில சான்றிதழ்களை பெற வேண்டியது அவசியமாகும். அவற்றில் ஒன்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அதைப் பற்றிய தகவல்களின் தொகுப்பைப் பார்ப்போம்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI):

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் வழங்கும் சான்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். உணவுப் பாதுகாப்பு பதிவு அல்லது உரிமத்திற்கு தகுதி பெறும் ஒவ்வொரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கும் இந்த சான்றிதழ் கட்டாயமாகும்.

உணவைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், மூலப்பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், மெஸ், கேண்டீன், பேக்கிங் மற்றும் விநியோகம், விற்பனை செய்யும் ஏஜென்சிகள் என உணவு சார்ந்த வணிகம் செய்ய விரும்பும் எவரும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவு பாதுகாப்பு பதிவு செய்ய வேண்டும்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. பதிவுக்கு தேவையான ஆவணங்கள்:

முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வணிகத்தின் பெயர் மற்றும் முகவரி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. பிரகடனப் படிவம், வணிகத்தின் இதர விவரங்கள் ஆகியவற்றை இந்த சான்றிதழ் பெற விரும்புபவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் பதிவு செய்யலாம்?

ரூ.12 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள வணிகங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள், சேமிப்பு அலகுகள், டிரான்ஸ்போர்ட்டர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உணவகம் தொடங்க நினைப்பவர்கள், விநியோகஸ்தர் கள் ஆகியோர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் பெற வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ