மொறுமொறு சேமியா தோசை

சுவையான சேமியா தோசை, பம்பாய் சட்னியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

Update: 2023-07-30 01:30 GMT

மொறுமொறு சேமியா தோசை

தேவையான பொருட்கள்:

சேமியா - ½ கப்

அரிசி மாவு - 1 கப்

ரவை - ¼ கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெங்காயம் (பொடிதாக

நறுக்கியது) - ½ கப்

கேரட் (துருவியது) - ½ கப்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - 4 கப்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் சேமியாவைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சேமியா, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். இந்த மாவில் கடைசியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும், மாவை ஊற்றி மெல்லிய, முறுகலான தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

பம்பாய் சட்னி

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1

தக்காளி (பொடிதாக நறுக்கியது) - 2

பூண்டு - 6 பல்

பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 1

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்

கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கடலைமாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு இடித்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர் கடலைமாவு கரைசலை ஊற்றி நன்றாகக் கலக்கவும். 3 நிமிடங்களுக்கு தொடர்ந்து கலக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான 'பம்பாய் சட்னி' தயார்.

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ