உலக இசை தினம்

உலக மக்களின் கவலையை தீர்க்கும் மாமருந்தாக இசை உள்ளது. குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும்பங்கு வகிக்கிறது

Update: 2022-06-19 01:30 GMT

லகின் பொது மொழி இசை. நாடு, மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இசைக்கு உண்டு. எண்ணம், செயல், நினைவுகள் என அனைவரின் உணர்வுகளும் இசைக்கு கட்டுப்படும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இசை, இயற்கையின் படைப்புகள் எழுப்பிய ஒலிகள் மூலம் உருவானது. இது காலத்திற்கேற்ப பல பரிமாணங்களைக் கடந்து, நவீனப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

1982-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் கூடினர். அந்த நாளே 'உலக இசை தின'மாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக இத்தினம் இருக்கிறது.

உலக மக்களின் கவலையை தீர்க்கும் மாமருந்தாக இசை உள்ளது. குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும்பங்கு வகிக்கிறது. சீரற்ற எண்ண ஓட்டம், அதீத சிந்தனை, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வு சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு இசை உதவுகிறது. சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து பெண்கள் விரைவாக மீள்வதற்கும் இசை சிறந்த வழியாகும். இசை கேட்டால் மனம் அசைந்தாடும். 

மேலும் செய்திகள்