வருமானம் தரும் பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு

‘பேப்ரிக் சாப்ட்னர்’ தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால்தான் ‘பேப்ரிக் சாப்ட்னர்’ பார்க்க அழகாக இருக்கும்.

Update: 2023-09-24 01:30 GMT

நாம் உடுத்தும் துணிகளுக்கு மென்மையும், நறுமணமும் அளிக்கக்கூடியவை பேப்ரிக் சாப்ட்னர்கள். இவை துணிகளை நீண்டகாலம் சிறந்த முறையில் பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் நிறங்களை மங்காமல் பாதுகாக்கும். பேப்ரிக் சாப்ட்னர்களை வீட்டிலேயே தயார் செய்ய முடியும். இல்லத்தரசிகள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம். பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும், எவ்வாறு தயாரிப்பது எப்படி சந்தைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

ஆர்.ஓ. அல்லது மினரல் வாட்டர் - 900 மி.லி.

சாப்ட்னர் பிளேக்ஸ் - 100 கிராம்

ஐசோபுரோபைல் ஆல்கஹால் - 50 மி.லி.

வாசனைத் திரவியம் - 20 மி.லி.

விருப்பமான வண்ணம் - 3 துளிகள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தவும். பிறகு அதில் சாப்ட்னர் பிளேக்ஸை போட்டு அது கரையும் வரை நன்றாகக் கலக்கவும். பின்பு அந்தக் கலவையை ஆற வைக்கவும்.

பின்னர் அதில் ஐசோபுரோபைல் ஆல்கஹால், வாசனைத் திரவியம், வண்ணம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது ஒரு லிட்டர் அளவுள்ள 'பேப்ரிக் சாப்ட்னர்' கிடைக்கும். இதனை காற்றுப் புகாத உலர்ந்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.

மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும்?

ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கூறிய பொருட்கள் கிடைக்கும். உங்கள் பகுதியில் அத்தகைய 'கெமிக்கல் ஸ்டோர்' எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பொருட்களை இணையத்தின் வழியாகவும் வாங்க முடியும்.

முக்கிய குறிப்புகள்:

'பேப்ரிக் சாப்ட்னர்' தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.

நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால்தான் 'பேப்ரிக் சாப்ட்னர்' பார்க்க அழகாக இருக்கும்.

சந்தைப்படுத்தும் முறைகள்:

உங்கள் தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டுமெனில், கவர்ச்சியான பிராண்ட் பெயருடன், அழகான பாட்டிலில் பேக்கிங் செய்வது அவசியமாகும். உங்கள் தயாரிப்பு தரமானதாகவும், நியாயமான விலையிலும் இருக்க வேண் டும்.

நீங்கள் தயாரித்ததை முதலில் உங்கள் வீட்டில் பயன்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றி பகிர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்