குர்த்திக்கு ஏற்ற பேண்ட் வகைகள்
குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.;
'குர்த்தி' எனப்படும் சல்வார், கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் இளம் பெண்கள் மட்டுமில்லாமல், நடுத்தர வயதினரும் விரும்பி அணியும் உடையாகும். இதற்கு பொருத்தமான வகையில் பேண்ட் அணிவது தோற்றத்தை மேம்படுத்தி காட்டுவதோடு, சவுகரியமாகவும் உணர வைக்கும். எந்த வகை குர்திக்கு எத்தகைய பேண்ட் அணிய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1 சிகரெட் பேண்ட்:
தற்போதைய லேட்டஸ்ட் ஸ்டைல் சிகரெட் பேண்ட்தான் மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் பொருத்தமானது. தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். எடை குறைவானது மற்றும் சவுகரியமானது. எல்லாவகை குர்த்திகளுடனும் அணிவதற்கு ஏற்றது.
2 ஸ்கர்ட்ஸ்:
குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
3 பளாசோ:
இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் இருக்கும் பளாசோ, 'ஸ்ரெய்ட் கட்' குர்த்தியுடன் அணிவதற்கு பொருத்தமாக இருக்கும். குறிப்பாக முழங்காலுக்கு கீழ் நீளும் குர்த்தி அணிந்தால் 'ஸ்டைலிஷ் லுக்' அளிக்கும். உயரமாக இருப்பவர்கள், சிறிய அளவு கிராப் டாப்புடன் இதை அணியலாம். உயரம் குறைவாக இருப்பவர்கள் வெவ்வேறு நிறங்களில் குர்த்தியும், பளாசோவும் அணிந்தால் சற்று உயரமாகத் தெரிவீர்கள்.
4 லெக்கின்ஸ்:
இறுக்கமாக காலுடன் ஒட்டி இருந்தாலும், பெண்களால் பெரிதும் விரும்பப்படும் பேண்ட் வகை லெக்கின்ஸ். முழு நீள குர்த்தி, அனார்கலி வகை குர்த்தி போன்றவற்றுக்கு லெக்கின்ஸ் பொருந்தும். பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். ஷார்ட் குர்த்தியுடன் லெக்கின்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
5 ஜீன்ஸ்:
ஜீன்ஸ் உடன் குர்த்தி அணிவது மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடையே வரவேற்பைப் பெற்ற ஸ்டைலாகும். எல்லாவகையான நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏற்ற காம்பினேஷன் இது. ஸ்லிட் கட், ஷார்ட், முழங்கால் நீளம் கொண்டது என எந்த வகை குர்த்திக்கும் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் அல்லது முழு கை கொண்ட குர்த்தியுடன் அணியும்போது, உங்களை உயரமாகக் காண்பிக்கும். ஷார்ட் ஸ்லீவ்லெஸ் குர்த்தியுடன் இது பொருந்தாது.
6 சுடிதார் பேண்ட்:
பாரம்பரிய வகையான இது 'கிளாஸிக் லுக்' கொடுக்கக்கூடியது. தினசரி பயன்பாட்டுக்கும், விசேஷங்களுக்கு அணிவதற்கும் பொருத்தமாக இருக்கும். அனார்கலி, முழு கை, காலர் குர்த்தி போன்றவற்றுக்கும் இதை அணியலாம். ஷார்ட் குர்த்தியுடன் அணியக்கூடாது.
7 பட்டியாலா பேண்ட்:
ஷார்ட் குர்த்தியுடன் அணியும்போது பாரம்பரியமான தோற்றம் கொடுக்கக்கூடியது பட்டியாலா பேண்ட். சாதாரண உடைக்கும் பொருத்தமாக இருக்கும். எல்லாவகை சீசனுக்கும் அணிவதற்கு சவுகரியமானது பட்டியாலா பேண்ட்.
8 தோதி பேண்ட்:
இது ஷார்ட் குர்தியுடன் மட்டும் அணிவதற்கு ஏற்றது. தொடைப் பகுதியில் அதிக பிரில்கள் இருக்கும் என்பதால் சற்று பருமனாக காண்பிக்கும். நீங்கள் அணியும் குர்த்தி எளிமையாக இருந்தால் பேண்ட் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருப்பது தோற்றத்தை அழகாக்கும்.