குளிர்காலத்தை கதகதப்பாக்கும் ஸ்வெட்டர் ஆடைகள்
ஸ்வெட்டர் ஆடைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அணிவதற்கு சவுகரியமாகவும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…;
ஒவ்வொரு பருவ காலத்தையும் அடிப்படையாக வைத்து, ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் குளிர்காலத்தை கதகதப்பாக்குபவை 'ஸ்வெட்டர்' ஆடைகள். குளிர்காலத்துக்கு அவசியமானவை என்பதையும் தாண்டி, வயது, நிறம் மற்றும் அணியும் நிகழ்வுக்கு ஏற்றவாறு அவற்றில் பல வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக குளிர்கால ஆடைகள் உல்லன் நூல், பருத்தி மற்றும் லெதர் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. ஸ்வெட்டர் ஆடைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அணிவதற்கு சவுகரியமாகவும் இருக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…