'மேக்ரேம்' நூல் பொம்மை உருவாக்கம்

‘மேக்ரேம் நூல் பொம்மை தயாரிப்பு’ குறித்து இங்கு பார்க்கலாம்.

Update: 2022-08-28 01:30 GMT

முடிச்சுகளால் உருவாக்கப்படும் அலங்கார அமைப்புக்கு 'மேக்ரேம்' என்று பெயர். இது நுணுக்கமான கைவினைக் கலையில் ஒன்று. மேக்ரேம் நூல் பயன்படுத்தி பல்வேறு விதமான அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 'மேக்ரேம் நூல் பொம்மை தயாரிப்பு' குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையானவை:

மேக்ரேம் நூல்

அட்டை

கத்தரிக்கோல்

அலங்காரப் பொருட்கள்

செய்முறை:

முதலில் நமக்குத் தேவையான நீளம் மற்றும் உயரத்துக்கு ஏற்றார்போல் அட்டையை வெட்டிக்கொள்ள வேண்டும்.

இப்போது அட்டையில் நூலை, தேவைக்கு ஏற்ற அளவில் கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ சுற்ற வேண்டும்.

போதுமான அளவு நூல் சுற்றிய பின்பு, நூலின் கீழ் பகுதியில் அட்டையை ஒட்டியபடி ஒரு துண்டு நூலை உட்புறமாக செலுத்தவும்.

உள்ளே செலுத்திய நூலை அட்டையின் முனைக்கு கொண்டு வந்து முடிச்சு போடவும்.

நூலால் கட்டிய முனைக்கு, எதிர் பகுதியில் உள்ள நூல்களை கத்தரிக்கோல் கொண்டு சீராக வெட்டவும்.

இப்போது நூல் கொத்து போன்ற வடிவம் கிடைக்கும். அதன் தொடக்கத்தில் இருந்து ஒரு அங்குல உயரத்தில், மற்றொரு துண்டு நூல் கொண்டு கட்டவும்.

பின் மீண்டும் கட்டிய பகுதியிலிருந்து ஒன்றரை அங்குல அளவில் இரண்டாவது துண்டு நூல் கொண்டு அனைத்து நூல்களையும் தொகுப்பாக கட்டவும். இப்போது நூல் பொம்மையின் அடிப்படை உருவம் கிடைக்கும். அதில் நம் கற்பனைத் திறனுக்கேற்ப அலங்காரம் செய்யலாம். 

Tags:    

மேலும் செய்திகள்