எளிதாக செய்யலாம் 'டெரரியம் மேக்னெட்ஸ்'

வீட்டை அலங்கரிக்கும் ‘டெரரியம் மேக்னெட்ஸ்’ தயாரிக்கும் விதம் பற்றி பார்ப்போம்.

Update: 2022-08-14 01:30 GMT

தேவையான பொருட்கள்:

கண்ணாடி மூடியுடன் கூடிய 3.5 விட்டம் கொண்ட டின்

சிறிய வெள்ளை கற்கள்

காய்ந்த மண்

அலங்கார மணல்

பிளாஸ்டிக் செடிகள்

காந்தம்

பசை

கத்தரிக்கோல்

செய்முறை:

காந்தத்தில் பசைத் தடவி டின்னின் பின் பக்கத்தில் ஒட்ட வேண்டும். டின்னுக்குள் இலை வடிவிலான அல்லது நீண்ட பிளாஸ்டிக் செடியை வைக்கவும்.

இப்போது காய்ந்த மண்ணை டின்னின் கீழ் பாகத்தில் சிறிதளவு பரப்பவும்.

அதன் மேல் அலங்கார மணலை அடுக்கு போன்று பரப்பவும்.

இறுதியாக சிறிய வெள்ளைக் கற்களை அலங்கார மணலின் மேல் அடுக்காக அமைக்கவும்.

இப்போது மற்ற பிளாஸ்டிக் செடிகளை உங்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப டின்னிற்குள் அடுக்கி அலங்காரப்படுத்தவும்.

இறுதியாக கண்ணாடி மூடியில் பசைத் தடவி டின்னை மூடவும்.

அழகான எளிதில் நகர்த்தக்கூடிய காந்த டெரரியம் தயார். இதை இரும்பு அலமாரி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றின் கதவில் ஒட்டி வைத்து அலங்காரப்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்