அசரவைக்கும் ஆரஞ்சு தோல் நகைகள்
சருமத்துக்கு நன்மை பயக்கும் ஆரஞ்சு தோலைக் கொண்டு கம்மல், ஆரம், பதக்கங்கள் மற்றும் நெக்லஸ் போன்ற அணிகலன்களை வடிவமைக்கிறார்கள். மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கு பொருந்தும் வகையில் இந்த அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
பெண்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதுமைகள் உருவாக்கப்படுகின்றன. பூக்கள், இலைகள், மரக்கட்டைகள் போன்றவற்றின் மூலம் அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. பழங்களின் மேல் தோலையும் வடிவமைப்பாளர்கள் கலைவண்ணமாக மாற்றிவிடுகிறார்கள். அந்த வரிசையில் சருமத்துக்கு நன்மை பயக்கும் ஆரஞ்சு தோலைக் கொண்டு கம்மல், ஆரம், பதக்கங்கள் மற்றும் நெக்லஸ் போன்ற அணிகலன்களை வடிவமைக்கிறார்கள். மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கு பொருந்தும் வகையில் இந்த அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆரஞ்சு பழத்தின் தோலை புதிதாக உரித்தது, சிறு சிறு செதில்களாக சீவியது, உலர வைத்தது என பல்வேறு முறையில் பயன்படுத்தி இவ்வகை அணிகலன்களை தயாரிக்கிறார்கள்.
அவற்றில் சில…