காமன்வெல்த் : பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கம் உறுதி - சாத்விக் சாய்ராஜ், சிராக் இணை வெற்றி

சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

Update: 2022-08-07 13:37 GMT

Image Courtesy : @Media_SAI

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் வெண்கலம், ஈட்டி எறிதலில் வெண்கலம் மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் சாய்ராஜ் / சிராக் ஜோடி 21-6, 21-15 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெங் சூன் சான் -கியான் மெங் டான் இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்