காமன்வெல்த் ஆக்கி: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-08 15:22 GMT

Image Tweeted By @TheHockeyIndia

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. இந்த போட்டியின் தொடரின் நிறைவு விழா இந்திய நேரப்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் கடைசி பதக்கமாக ஆடவர் ஆக்கி அணி வென்ற வெள்ளி பதக்கம் அமைந்தது. இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது.

இந்த நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காமன்வெல்த் விளையாட்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த அணி இனி வரும் காலங்களில் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மேலும் இளைஞர்கள் ஆக்கி விளையாட்டை தொடர இந்த வெற்றி அவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்