காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கம் வென்றார்..!

காமன்வெல்த்தின் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.;

Update: 2022-08-06 18:37 GMT

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

காமன்வெல்த்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான (76 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா சிஹாக் ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூனை சந்தித்தார். இந்த போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக் 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார்.

இதன் மூலம் இந்தியாவின் மல்யுத்த பிரிவில் 6 வீரங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். அன்ஷு மாலிக் ,சாக்ஷி வெள்ளி பதக்கமும், வினேஷ் போகட் தங்கபதக்கமும், பூஜா கெலாட் மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

இந்தப் பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்