காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங் வெற்றி..!
சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார்.;
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
இதில் நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில். 64 வது சுற்றில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அனாஹத் சிங் (14 வயது ) ,செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் வீராங்கனை ஜாடா ரோஸ் ஆகியோர் மோதினர் .
இதில் சிறப்பாக விளையாடிய அனாஹத் சிங் 11-5 11-2 11-0 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார்.இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .
இது மிகவும் உற்சாகமானது .போட்டி தொடரும் போது எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது தனது வெற்றிதொடக்கத்திற்குப் பிறகு அனாஹத் சிங் கூறினார்.